யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோவில் வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கு இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, குறித்த இளம்பெண்ணின் தாயார் மீதும் அந்த இளைஞர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




