திருகோணமலைஇலங்கைகிழக்கு மாகாணம்

யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது!

Desktop Image Mobile Image

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (15) வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேற்பார்வையில் யானை மின்வேலிகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணிகளில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த இருவரையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, அவர்கள் மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து போத்தலில் அடைக்கப்பட்ட சாராயமும் மீட்கப்பட்டதாகத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதனையடுத்து, இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மொரவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவரும் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

அறிவை சோதிப்போம். Google எந்த வகையான சேவைக்கு பிரபலமானது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம்