இலங்கைசெய்திகள்

குகைக்குள் கைக்குழந்தையுடன் சிறுமி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Desktop Image Mobile Image

உடுதும்பறை, நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் உள்ள கல் குகையில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (15) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய மற்றொரு நபர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் 23 வயது சந்தேகநபரின் உறவினர் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி, இரண்டு மாத பெண் குழந்தையுடன் குகை ஒன்றில் வசித்து வந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் குடும்பத்தினர் உடுதும்பறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, அப்பகுதியில் உள்ள கடையொன்றில் வழக்கத்தை விட அதிகளவு அரிசி கொள்வனவு செய்துவந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

அவரைக் கண்காணித்த பொலிஸார், அவர் சென்ற வனப்பகுதியைத் தொடர்ந்து சென்றபோது, பொலித்தீனால் மூடப்பட்டிருந்த கல் குகைக்குள் சிறுமியையும் குழந்தையையும் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகளில், சிறுமி குறித்த குகையிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியும் குழந்தையும் பொலிஸாரின் பாதுகாப்பில் மீட்கப்பட்டு, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: மின்சார விளக்கை மேம்படுத்திய கண்டுபிடிப்பாளர் யார்?
Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்