வங்கிக்குச் சென்று திரும்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 20 வயது யுவதி!

கொழும்பு, பாதுக்கைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர், தனது அறையில் அசைவற்ற நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் வங்கித் தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் மதியம் வீடு திரும்பிய பெற்றோர், மகள் தனது அறையில் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யுவதியின் திடீர் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 வயதுடைய யுவதியின் திடீர் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!