
கம்பஹா மாவட்டம், திவுலபிட்டி – வெவகொடர பகுதியில் அமைந்துள்ள நார் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று வாகனங்களும், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவிலிருந்து ஒரு வாகனமும் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் முயற்சித்து வருகின்றனர்.
எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? தொலைபேசியுடன் தொடர்புடைய கண்டுபிடிப்பாளர் யார்?