
இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடையை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான வடிவமைப்புப் பரிசீலனையில் சாம்பல் நிறச் சட்டை மற்றும் நீல நிறக் காற்சட்டையைக் கொண்ட சீருடையும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடா பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த வகையில் இந்த வடிவமைப்பு அமையலாம் என பொலிஸ் திணைக்களத்தின் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின்போது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
மேலும், இலங்கையின் காலநிலை மற்றும் பொலிஸாரின் பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புதிய சீருடையின் வடிவமைப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அதன் இறுதி வடிவம் மற்றும் அறிமுகத் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!