
மிஹிந்தலை, ரம்பாவ பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பாவ பகுதியில், வெலிஓயா சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதன்போது, அவற்றில் ஒரு பஸ்ஸின் பின்னால் வந்த மூன்றாவது பஸ்ஸும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 76 பயணிகள் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் மிஹிந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அநுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!