
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோதலின் காரணமாக முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் சுமார் 20 நிமிடங்கள் போராடி அவரை மீட்டுள்ளனர்.
விபத்தின்போது முச்சக்கரவண்டியை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மூன்று பெண்களும் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!