
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (20) மாலை மல்வத்தைப் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 மற்றும் 21 வயதுடைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றைய 21 வயதுடைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துநரின் கவனயீனமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!