
பலாங்கொடை பங்கியாவத்த பகுதியில் இடம்பெற்ற மதில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் 1.15 மணியளவில் வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் சிறுவன் நின்றுகொண்டிருந்தபோது, அந்தச் சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இதனால் சுவரின் இடிபாடுகளுக்குள் சிறுவன் சிக்கியுள்ளார். இதனை அவதானித்த சிறுவனின் தாயார் அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டுள்ளார்.
பின்னர், சிறுவன் முச்சக்கரவண்டி மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (22) பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!