வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு

வவுனியா, ஓமந்தை – கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன 60 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொந்தக்காரன்குளத்தைச் சேர்ந்த து. நாகராசா என்பவர் கடந்த புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரைக் காணவில்லை என உறவினர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், காணாமல் போன குறித்த நபர் இன்று (21.11.2026) அந்தப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
உங்களுக்கு தெரியுமா? கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?