உலக செய்திகள்

12 ஆண்டுகள் காத்திருந்த தாய்க்கு கிடைத்த 5 பொக்கிஷங்கள்

Desktop Image Mobile Image

எத்தியோப்பியாவின் ஹராரி பிராந்திய மாநிலத்தில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த 35 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளுக்கு பிறந்தளித்துள்ளார். இந்த சம்பவம்  பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பிரசவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பெட்ரியா ஆடம் (Bedriya Adem ) என்ற பெண், நான்கு ஆண் குழந்தைகளுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகியுள்ளார். ஹிவோட் ஃபானா சிறப்பு வைத்தியசாலையில்  (Hiwot Fana Specialised Hospital) சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இந்தப் பிரசவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயும், பிறந்த அனைத்து குழந்தைகளும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் எடை 1.3 முதல் 1.4 கிலோ வரை இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

 

“ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் கிடைத்தது எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது,” என்று பெட்ரியா உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது கணவருக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை அவர்களுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

“அந்தக் குழந்தை இருந்தாலே போதும், நீ கவலைப்பட வேண்டாம் என்று என் கணவர் எப்போதும் கூறுவார். ஆனால் கிராமமெங்கும் நான் குழந்தை பெற முடியாதவள் என்று பேசப்பட்டதால்,  நான் மனதாலும் உணர்ச்சியாலும் மிகவும் துன்பப்பட்டேன், கடந்த காலத்தில் நான் அனுபவித்த வேதனைகள் இப்போது தொலைதூர கனவு போல தோன்றுகிறது. அதை மீண்டும் நினைக்கவே விரும்பவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

“நான் ஒரு குழந்தைக்காக மட்டும் பிரார்த்தித்தேன். ஆனால் அல்லாஹ் எனக்கு ஐந்து குழந்தைகளை வழங்கினார்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) இல்லாமல் இயற்கையாகவே அவர் கர்ப்பம் தரித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கையாக ஐந்து குழந்தைகள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு சுமார் 5.5 கோடியில் ஒருவருக்கு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

நயிப், அம்மார், முன்சிர், நஸீரா மற்றும் அன்சார் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஐந்து குழந்தைகளும் தற்போது வைத்தியசாலையில் மருத்துவ பராமரிப்பில் உள்ளனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: இத்தாலியின் தலைநகர் எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு