வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் குறித்த மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று (20) இரவு 11.30 மணி வரை அது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் இரவு வேளைகளில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், இதன்போது பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடி மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




