திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது

திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடவடிக்கை இடம்பெற்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, உவர்மலை பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது, விடுதியின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




