மட்டக்களப்பில் மதுபோதையிலும் போதைப்பொருள் பாவித்தும் வாகனம் செலுத்திய 23 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்திய 23 பேர் விசேட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
இதன்போது, மொத்தம் 141 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரம், பிரதான பேருந்து நிலையம், ஏறாவூர், காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்துகள், கனரக வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 23 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இவ்வாறான விசேட சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!