இலங்கை

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Desktop Image Mobile Image

டீசல் விலையில் குறைப்பு ஏற்பட்டாலும், எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாத இறுதியிலும் நடைமுறைப்படுத்தப்படுவதால், அதனை அடிப்படையாகக் கொண்டு பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் அல்லது அதற்கு முன்பாக டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த ஆறு மாதங்கள் வரை கட்டணத்தில் மீண்டும் எந்த மாற்றமும் செய்யப்படாது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் மாத இறுதி வரை தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கு நாளொன்றுக்கு சுமார் 25 ரூபாய் வீதம், மொத்தமாக 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், டீசல் விலை குறைந்தால் பஸ் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இடம்பெறவில்லை என்றும், இதுவரை நல்லிணக்கத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

 

இனிமேல் அந்த நடைமுறையைப் பின்பற்றப் போவதில்லை என்றும், அது தொடர்பில் தமக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பினாலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

அறிவை சோதிப்போம். WordPress எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம்