இலங்கைசெய்திகள்

கேகாலையில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் – 20 பேர் காயம்

Desktop Image Mobile Image

கேகாலை மாவட்டத்தின் கரடுபன பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் தெரிவிப்பதன்படி, இன்று காலை 6.15 மணியளவில், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான SLTB பேருந்து ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும், தனியார் பேருந்து திகனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button