
மறைந்த இயக்குநர், நடிகர் மற்றும் வசனகர்த்தாவான கே. பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பாக்யராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், துயரத்தில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
இயக்குநர், நடிகர் மற்றும் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் போற்றப்படும் கே. பாக்யராஜ், இன்று சென்னையில் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73 ஆகும்.
அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழ் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரது இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.



