வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

மாநகரசபை சொத்துகள் காணாமல் போன விவகாரம்: நால்வரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவு

Desktop Image Mobile Image

வவுனியா மாநகரசபைக்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ பொருட்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போயுள்ளதாக மாநகரசபை செயலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சிலரை கைது செய்ய அனுமதி கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகினர்.

 

 

இதனை பரிசீலித்த நீதிமன்றம், முன்னாள் மேயர் சு. காண்டீபன் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button