மலையகம்இலங்கை

தவலந்தன்னையில் பார ஊர்தி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

Desktop Image Mobile Image

நுவரெலியா மாவட்டத்தின் தவலந்தன்னை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூண்டுலோயா பொலிஸார் தெரிவிப்பதன்படி, நேற்று முன்தினம் (04) மாலை சுமார் 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தி ஒன்றும், எதிர்திசையில் பூண்டுலோயாவில் இருந்து தவலந்தன்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கேந்திர விகாரை அருகிலுள்ள சாலையில் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதையடுத்து உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பார ஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button