மலையகம்இலங்கை

மரம் முறிந்து முச்சக்கர வண்டி மீது விழுந்து 3 பேர் பலி!

Desktop Image Mobile Image

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய மாப்பாகந்தா பிரதான வீதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரமான விபத்தில், முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி உயிர் தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாப்பாகந்தா பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகியுள்ளது.

 

 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

 

இந்நிலையில், நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவாகவே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு