இலங்கை

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை

Desktop Image Mobile Image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது.

இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

இந்த சூழலிலேயே கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: சூரியக் குடும்பத்தில் வளையங்களுக்குப் பிரபலமான கோள் எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!