விளையாட்டு

உலக தரவரிசையில் 5ஆவது இடத்துக்கு முன்னேறிய ருமேஷ் தரங்க

Desktop Image Mobile Image

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனத்தின் புதிய தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.

இதன்படி, உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருந்த அவர் தற்போது 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வரும் ருமேஷ் தரங்கவின் இந்த முன்னேற்றம், இலங்கை தடகள வரலாற்றில் மற்றுமொரு முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

 

 

எதிர்வரும் சர்வதேச தடகளப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் இலங்கைக்கு பதக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அவரது தற்போதைய நிலைமை அமைந்துள்ளதாக விளையாட்டுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும், கடந்த ஜூன் 1 ஆம் திகதி மொரோக்கோவில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க 85.97 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.

அந்தப் பெறுபேறும் அவரது உலக தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

Back to top button