உலக செய்திகள்

காஸா மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

காஸா பகுதியில் நேற்று (03) நள்ளிரவு இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையில் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காஸாவின் பல பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

இதனிடையே, காஸாவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 936 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சிகள் குறித்து சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button