மன்னார்இலங்கைவடக்கு மாகாணம்

கணவனை துண்டாடி மலசல கூட குழியினுள் வீசியெறிந்த இளம் குடும்ப பெண்! அரங்கேறிய கொடூரம்

Desktop Image Mobile Image

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

 

 

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (3) துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.  குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

 

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.

பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

 

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என தெரிய வருகிறது. குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உறப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? மனித உடலில் உணவை செரிக்க உதவும் அமிலம் எங்கு உள்ளது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு