இலங்கை

பாரஊர்தி கவிழ்ந்து விபத்து

டிக்கோயா – புளியாவத்தை பகுதியில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற பாரஊர்தி விபத்தில் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

விபத்தில் படுகாயமடைந்த சாரதி உடனடியாக மீட்கப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button