இந்தியா

தமிழ்நாட்டை அதிரவைத்த TVK ; பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து விஜய்க்கு வந்த தகவல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள்.

 

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

அத்துடன் “தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (TVK) சிறப்பான செயல்பாட்டுக்கு எனது வாழ்த்துகள்.

 

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் மத்திய அரசு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button