
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் எதிர்வரும் ஏழாம் திகதி அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிடக் கட்சிகளின் பலத்த போட்டியைத் தாண்டி விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
சுமார் 35 வீதம் வாக்கு விழுக்காட்டைப் பெற்றுள்ள தவெக, தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக நீடித்த இருதுருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தொடர்ந்து விஜய்க்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், இலங்கை வாழ் மக்கள் மற்றும் அரசியல் தலைமைகள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




