இலங்கை

ஹோமாகம எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு: பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி?

Desktop Image Mobile Image

ஹோமாகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதற்றநிலையை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது வாகனத்தின் மீதும் உடல் மற்றும் தலைப்பகுதியிலும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன், அவர் தன்னைத்தானே தீயிட்டு உயிரிழக்க முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

 

நிலையிலிருந்த எரிபொருள் ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு, குறித்த நபரை கட்டுப்படுத்தியதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த ஹோமாகம பொலிஸார் விரைந்து சென்று அந்த நபரை காவலில் எடுத்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button