யாழில் அதிர்ச்சி சம்பவம்: குடும்பப் பெண் உயிரிழந்தார்

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கிடைத்த தகவலின்படி, குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், திருமணத்திற்குப் பின்னர் கணவனின் தாயார் அவரை ஏற்காத நிலை இருந்ததாகவும், 25 பவுண் தங்க நகை மற்றும் வீடு சீதனமாகக் கோரி தொடர்ந்து நச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்ததால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சி இடம்பெற்ற போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக குடும்பத்தில் மன அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மன விரக்தியில் குறித்த பெண் நேற்று காலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.




