இலங்கை

யாழ்–கண்டி வீதியில் விபத்து: கெப் வாகனம் மோதி யானை உயிரிழப்பு

Desktop Image Mobile Image

image:-JVP News

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல தோணிகல பகுதியில் கெப் வாகனம் ஒன்றுடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) இடம்பெற்ற இந்த விபத்தில் கெப் வாகனத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டியிலிருந்து வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கெப் வாகனமே விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது வவுனியா புளியங்குளம் மற்றும் பள்ளி வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சாரதி மற்றும் மற்றொரு இளைஞர் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

உயிரிழந்த யானை தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் யானையின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button