உலக செய்திகள்தொழில்நுட்பம்

Blue Origin ரொக்கெட் வெடித்து சிதறியது – NASA அதிர்ச்சி

Desktop Image Mobile Image

அமெரிக்காவின் Kennedy Space Center-இல் சோதனையில் ஈடுபட்டிருந்த Blue Origin நிறுவனத்தின் New Glenn ரொக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலவின் மேற்பரப்பிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நீண்டகால திட்டங்களுடன் தொடர்புடைய பணிகளின் ஒரு பகுதியாக இந்த ரொக்கெட் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (28) இரவு சுமார் 9 மணியளவில் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது ரொக்கெட் வெடித்ததாக NASA தெரிவித்துள்ளது.

 

 

98 மீட்டர் நீளமுடைய இந்த ரொக்கெட், ஜூன் 4ஆம் தேதி Amazon நிறுவனத்தின் லியோ பிராட்பேண்ட் வலையமைப்பிற்காக 78 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விபத்து தொடர்பாக Jeff Bezos வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விபத்தில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இது கடினமான நாள் என்றாலும், தேவையான சீரமைப்புகளை செய்து மீண்டும் பயணத்தை தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.

 

 

New Glenn ரொக்கெட்டை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட உலகின் ஒரே ஏவுதளம் LC-36 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தளம் தற்போது சேதமடைந்துள்ளதால், அதை மீண்டும் சீரமைக்கும் வரை Blue Origin பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் Elon Musk-ன் SpaceX மற்றும் Starlink சேவைக்கு போட்டியாக உருவாகி வந்த அமேசானின் லியோ நெட்வொர்க் திட்டத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related Articles

Back to top button