இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்வவுனியா

வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

Desktop Image Mobile Image

வவுனியா மாநகர சபையின் மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்தும், உறுப்பினர் பதவிகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இதற்கான உத்தியோகபூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இருவரின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் நடத்தை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

 

 

அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் அதில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட இரு உள்ளூராட்சி பிரதிநிதிகளையும் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள், 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

 

விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அவர் மேயராகத் தொடரத் தகுதியற்றவர் எனத் திருப்தியடைந்ததாக ஆளுநர் அறிவித்துள்ளார்.

இந்த பதவி நீக்க நடவடிக்கை வடக்கு மாகாண உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

வினாடி வினா: உப்பின் பொதுவான வேதியியல் குறியீடு எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது திருகோணமலை உவர்மலையில் விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம்