யாழ்ப்பாணத்தில் அதிரடி சோதனை; தடை செய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 274 தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று (19) இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 274 தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!