இலங்கை

மொனராகலையில் அதிகாலை கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் பலி

Desktop Image Mobile Image

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டி, எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

யாத்திரிகள் குழுவை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்தில் சிக்கியதாக தெரியவருகின்றது. விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி சாரதி மற்றும் உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

அறிவை சோதிப்போம். தமிழின் தேசியக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்