இலங்கை
வெசாக் வாரத்தையொட்டி நாடு முழுவதும் இறைச்சிக் கடைகள் மூடல்

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் தற்காலிகமாக மூட அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (27) முதல் ஜூன் 2ஆம் திகதி வரை இறைச்சிக் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளையும் இந்த காலப்பகுதியில் மூடுமாறு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெசாக் வாரத்தின் மத மற்றும் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





