இந்தியாயாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

இளம் தவில் கலைஞரின் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியது

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளம் தவில் கலைஞரான பிரசாந் சச்சின் (17) உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கலைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவல்களின் படி, அவர் நேற்று புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பின்னர் அச்சுவேலி பகுதியில் நடைபெறவிருந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

இந்த நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

 

 

எட்டு வயதிலேயே தவில் வாசிக்கத் தொடங்கிய பிரசாந் சச்சின், தனது திறமையால் குறுகிய காலத்திலேயே பலரது பாராட்டைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button