விளையாட்டுசெய்திகள்

FIFA வரலாற்றில் முதன்முறை: உலகக் கிண்ண சாம்பியன்களுக்கு 30 தங்க மோதிரங்கள்

Desktop Image Mobile Image

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு கோப்பையும் தங்கப் பதக்கங்களும் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், வட அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் வெற்றி மோதிர (Championship Ring) மரபை, பிபா இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியின் வீரர்களுக்கு 30 பிரத்யேக தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உலகக் கிண்ணத்தை முன்னிட்டு மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் சாம்பியன் அணிக்கான 30 மோதிரங்களைத் தவிர, மீதமுள்ள மோதிரங்கள் ரசிகர்களின் விற்பனைக்காக வெளியிடப்படவுள்ளன. எனினும், அவற்றின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button