வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி – சகோதரி படுகாயம்

Desktop Image Mobile Image

வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சகோதரர் மற்றும் சகோதரி, ஏ9 வீதியின் புளியங்குளம் புதூர் பகுதியில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button