இலங்கைசெய்திகள்

அதிகாலை கோர விபத்து; பஸ் – டிப்பர் மோதலில் 20 பேர் காயம்

Desktop Image Mobile Image

கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தால் குறித்த பிரதான வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டார். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் பின்னர் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பஸ் மற்றும் டிப்பர் வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button