இலங்கை
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று (03) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




