யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ரூ.36 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் அந்தோணிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெருமளவிலான கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 220 கிலோகிராம் எடையுடைய 102 கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 36 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button