இலங்கைகிழக்கு மாகாணம்செய்திகள்திருகோணமலைமட்டக்களப்புமுல்லைத்தீவுவடக்கு மாகாணம்வவுனியா

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுரை

Desktop Image Mobile Image

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (12) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை (Heat Advisory) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, மனித உடல் உணரும் வெப்பநிலையை அளவிடும் ‘வெப்பக் குறியீடு’ (Heat Index) பகல் நேரத்தில் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன் காரணமாக, பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், வேலை நேர இடைவெளிகளில் நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வீடுகளில் வசிப்போர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை பாதுகாப்பாக பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக் கூடாது என பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

வெயிலில் வெளியே செல்ல வேண்டியவர்கள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் கடினமான உடல் உழைப்பை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். நிழலான இடங்களில் ஓய்வெடுப்பதுடன், உடலை எப்போதும் போதுமான அளவு நீரேற்றத்துடன் (Hydrated) வைத்திருக்க வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, இலேசான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button