இலங்கைசெய்திகள்

ஹோமாகம கிணற்றில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு!!

Desktop Image Mobile Image

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகிலிருந்த கிணற்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் மொரன்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button