யாழ்ப்பாணம்செய்திகள்வடக்கு மாகாணம்

காணி விடுவிப்புக் கோரி மூன்றாவது வார போராட்டம்

Desktop Image Mobile Image

உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி சந்திப் பகுதியில் இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தங்களது காணிகளை மீள ஒப்படைக்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

இந்தப் போராட்டத்தில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் அமைப்பாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகா, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது, காணி விடுவிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், காணி மீட்பு கோரிக்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Back to top button