
குருநாகல் மாவட்டம் நாரம்மல – வாரியபொல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சியம்பலாகஸ்கொட்டுவ பகுதியில் உள்ள மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




