மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணம் மீசாலையில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நிறுவனத்தில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர் எனவும், மற்றையவர் திருடப்பட்ட பொருட்களை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




