இலங்கை

வர்த்தகர் மீது பகல்நேர துப்பாக்கிச் சூடு-களுத்துறையில் அதிர்ச்சி

Desktop Image Mobile Image

களுத்துறை பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சுமார் 8.59 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

 

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button