வானிலைஇலங்கை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை

Desktop Image Mobile Image

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் இன்று (15) மேகமூட்டமான வானிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதனிடையே, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 15ஆம் திகதி அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது அந்தக் காலப்பகுதியில் நாட்டில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

கடற்பரப்புகளிலும் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

அறிவை சோதிப்போம். 12 × 12 எவ்வளவு?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!