வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு

Desktop Image Mobile Image

வவுனியா தோணிக்கல் பகுதியில் ஒரே வீட்டிலிருந்து தாய் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது பெறாமகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (19.09.2026) மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் உறவினர்கள் இருவர் வீட்டிற்கு சென்றபோது, தாய் வீட்டின் பிரதான அறையில் இரத்தக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

அதேவேளை, வீட்டின் மற்றுமொரு அறையில் அவரது பெறாமகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அலஸ்கிறின் என்ற பெண்ணும், அவரது 35 வயதுடைய பெறாமகனான அஜந்தன் என்ற இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இளைஞர் தனது தாயை கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும், பின்னர் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தின் பின்னணி மற்றும் முழுமையான காரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? வேகமாக ஓடும் நிலவிலங்கு எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் கோட்டை நீதிமன்றத்தில் 500 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அலுவலக உதவியாளர் கைது கோட்டை நீதிமன்றத்தில் 500 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அலுவலக உதவியாளர் கைது விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி – ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல் விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி – ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம் கோட்டை நீதிமன்றத்தில் 500 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அலுவலக உதவியாளர் கைது கோட்டை நீதிமன்றத்தில் 500 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அலுவலக உதவியாளர் கைது விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி – ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல் விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி – ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா